பென்னாகரம்

Jun 14, 2025, viewer - 2113, சரவணன்   நிருபர் (தருமபுரி).

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சாரம் 

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பேருந்து நிலையத்தில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் மக்கள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏரியூர் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

பிரசாரப் பயணத்துக்கு ஒன்றிய செயலாளர் எம்.தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் துவக்கி வைத்து பேசினார். மூங்கில் மடுவு, ஏரியூர், தின்னபெல்லூர், நெருப்பூர், செல்லமுடி, ராம் கொண்ட அள்ளி, தொண்ணகுட்ட அள்ளி பகுதியில் பல்வேறு கிராமங்களில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது. மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை, வேலையின்மை, விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் காவிரி உபரிநீர்த்திட்டத்தை நிறைவேற்றிட, ஒட்டனூர்-கோட்டையூர் பாலம் அமைத்திட, அனுபவ நிலங்களுக்கு பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.விசுவநாதன், ஜி.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.குமார், என்.பி.முருகன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் மாணிக்கம், குழந்தைசாமி, ராஜா மற்றும் ராமசாமி, ராஜா, செந்தில், அசோகன் உள்ளிட்ட சிபிஎம் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.