தர்மபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு பாப்பிரெட்டிப்பட்டி அரூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைக் உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் திமுக பொறியாளர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் காரிமங்கலம் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னிலையில் நடந்த நேர்காணலை மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஞானசேகரன் நடத்தினர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கண்ண பெருமாள், அடிலம் அன்பழகன், வக்கீல் கோபால், தென்னரசு, பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சென்னகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் அழகுசிங்கம், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் வெற்றிவேல், துணை அமைப்பாளர் அருண்பிரசாத், பார்த்திபன், கோவிந்தசாமி, பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்