தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பந்தார அள்ளியில் நடந்தது. முன்னதாக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிகரன் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அடிலம் அன்பழகன், கண்ண பெருமாள், ஆனந்தன், மாவட்ட துணை அமைப்பாளர் மகேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், சுரேஷ், விஜய், மணி, மஞ்சுநாத் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகப் பேச்சாளர் அனல் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நான்காண்டுகள் செய்த சாதனைகளை மற்றும் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து பேசினர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் குமரவேல், நல்லதம்பி, பூபதி, அண்ணாமலை, கணேசன், ஒன்றியவை தலைவர் மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர்கள் சண்முகம், மாதையன், சித்ராவடிவேல், ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி கணேசன், சங்கர், முன்னாள் தலைவர் மாதன் தகவல் தொழில்நுட்ப அணி அறிவழகன், சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தமிழ் நன்றி கூறினார்.