தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அண்ணாமலை அள்ளியில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞர்அணி சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.
ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெருமாள் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்திற்கு ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிதம்பரம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஏ.வி.குமார், மாவட்ட முன்னாள் அவைதலைவர் தனகோடி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்திபன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவானிஇளங்கோ, மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வீ.டி கோபால், தலைமை கழக பேச்சாளர்கள் லயோலாராஜசேகர், தங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளையும் குறித்து பேசும் போது
மகளிருக்கான விடியல் பயணம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம்
மூலம் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்விக்கான நிதி உதவி, முதியோர்கள், மாற்று திறனாளிகள், திருநங்கைகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சமூக வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இக்கூட்டத்தில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முருகன், தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள் பிரகாஷ், அணிகளின் பொறுப்பாளர்கள் ஜே.எம்.சக்தி, வினோத்குமார், முனிராஜ், பழனிமுத்து, சுந்தரம், ரங்கநாதன், மாயவன், துரை, முனிரத்தினம், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தங்கவேல், சாதிக், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் நன்றி தெரிவித்தார்.