தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 11 வது சர்வதேச யோகா தினம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பஞ்சப்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதையன் தலைமை வகித்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் .
இதில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பஞ்சபள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சின்னாறுஅணை வரை ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி யோகாசன பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு டிஷர்ட் மற்றும் தொப்பியினை வட்டார மருத்துவ அலுவலர் சிவகுருவழங்கி யோகா பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினார்.
இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரித்விராஜ் மற்றும் பல்நோக்கு பணியாளர் வெங்கடேஸ்வரி யோகாசனங்கள் குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் சோனியா, செவிலியர்கள்,
மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கு பெற்றனர் .