தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அடுத்த ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி கவுன்டர், இவர் வளர்த்து வந்த காளை மாட்டை இவரது நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி இருந்தார்.
புல் மேய்ந்து கொண்டிருந்த காளை மாடு அப்பகுதியில் இருந்த அவருக்கு சொந்தமான 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது,
காளையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர் மாடு கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் காளை மாட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.