பாலக்கோடு

Jun 23, 2025, viewer - 2536, வேலு   நிருபர் (தருமபுரி).

பாலக்கோடு பாஜக அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு
பாஜக அலுவலகத்தில்  11 - வது சர்வதேச யோகா தினம் பாஜக மத்திய நலத்திட்ட பிரிவு  மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில்  நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர பொருளார் முனியப்பன், நகர பொது செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் யோகா பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து  பேசினர்.
அதனை தெடர்ந்து யோகாசன பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்தனர்.

இதில் நகர செயலாளர் நந்தகிரி, நகர பொறுப்பாளர்கள் அரவிந்த், பச்சையப்பன், சகாதேவன், மணிவண்ணன், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.