பாலக்கோடு

Jun 23, 2025, viewer - 2541, வேலு   நிருபர் (தருமபுரி).

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் த.வெ.க சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்


தர்மபுரிமாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் த.வெ.க. தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு 
 கொள்கை விளக்க பொதுக் கூட்டம் ஒன்றிய செயலாளர் குமார், தலைமையில் நடந்தது.

மாவட்ட செயலாளர் தாபா சிவா, நகர செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.


இதில் கழக கொள்கை பரப்பு செயலாளர்கள்  அருண்ராஜ், லயோலாமணி, மாநில செய்தி தொடர்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர் திமுக குடும்ப அரசியல், வாரிசு அரசியல் செய்வதாகவும், திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்படுகிறது.
திமுக தனது கொள்கையை பாஜகவிடம் அடமானம் வைத்து ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்து வருவதாகவும்,
தமிழகத்திற்க்கு பாஜக  தோளில் சுமந்து வந்த கட்சி திமுகதான்,
வரும் 2026ம் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களை கைப்பற்றி தளபதி விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என பேசினார்.
கூட்ட மேடையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.