களத்தூர் மின்சாரத்துறை அலுவலகம் முன்பாக தேங்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி மெயின் ரோடு பகுதியில் மின்சார அலுவலகம் அமைந்துள்ளது. அதன் முன்பாக தேங்கி சுகாதார சீர்கே ஏற்படுத்தி வரும் சாக்கடையால் பொதுமக்கள், மின்சார அலுவலகத்திற்க்கு வரும் மின் பயனீட்டாளர்கள், பெரும் அவதிக்கும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
கடத்தூர் பேரூராட்சி மின்சார துறை அலுவலகம் முன்பாக ரோட்டில் தேங்கி கிடக்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகி வருகிறது.
இந்த சாக்கடையால் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் குழந்தைகள் முதியவர்கள் என பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவற்றை முறையாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடித்துள்ளனர்.