பொது மக்களுக்கு இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்-
பொ. துருஞ்சிப்பட்டி சந்தையூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும். என வலியுறுத்தி அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது எனவும் அவர்கள் முற்றுகையிட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதை அறிந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த
தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன், டாஸ்மாக் உதவி ஆணையர் நர்மதா, அரூர் டி.எஸ்.பி.கரிகால் பாரிசங்கர் ஆகியோர் பொது மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடை மாற்றுவது குறித்து பத்து நாட்களுக்குள் முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைஅடுத்து,
அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கூறும் பொழுது பொதுமக்கள் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இந்த மதுபான கடை இருந்து வருவதால் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் இதுகுறித்து கடந்த நான்கு கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.
பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சந்தையூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .