தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பி.செட்டிஅள்ளி ஊராட்சி, கரம்பு கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பாலக்கோடு டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற தாராக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டு தர்மபுரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு அதற்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து மரம் வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உள்ள கரம்பு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை தலைவர் முருகன் தலைமையில் செல்வராஜ் சீனிவாசன் பழனி மகேந்திரன் மாரிமுத்து பொறுப்பாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி, பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.