தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் தொல்குடி திட்ட சிறப்பு முகாம் திட்ட அலுவலர் அசோக்குமார் தலைமையில் நடந்தது.
தாசில்தார் ரஜினி, தனிதாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார்கள் எழில் மொழி, உமாபதி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் பாலக்கோடு தாலுக்காவிற்க்கு உட்பட்ட பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வீட்டுமனை பட்டா, இலவச வீடு, பிறப்பு, இறப்பு சான்று, சாதி சான்று, நல வாரிய உறுப்பினர் அட்டை உள்ளிட்டவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 120 பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
வீட்டு மனை பட்டா, குடும்பஅட்டை, ஆதார்அட்டை, நல வாரிய உறுப்பினர் அட்டை உள்ளிட்ட 60 மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மற்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
இம்முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் காளிஸ்வரன், கோகிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.