தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடந்தது.
இதில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்டார் தொடர்ந்து,BDA, மற்றும் BLA2 நிர்வாகிகள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை வழங்கியவர், கழகத்தலைவர் ஆணைப்படி 40% உறுப்பினர் சேர்க்கை இலக்கினை வீடு, வீடாக சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி விரைவாக உறுப்பினர் சேர்க்கை பணியினை முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் ஒன்றிய செயலாளர் முனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், பார்வையாளர் பரணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகுசிங்கம் முக்கிய நிர்வாகிகள் இருசன், மற்றும், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து ஆலோசனை வழங்கினார்கள்