பாலக்கோடு

Jul 28, 2025, viewer - 3046, வேலு   நிருபர் (தருமபுரி).

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு


தர்மபுரிமாவட்டம்,  பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி  நடந்தது. பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் போட்டியினை துவக்கி வைத்தார்.

மாவட்ட ஹாக்கி போட்டியின் முதன்மை அமைப்பாளர் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.

பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான  இப்போட்டியில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த  பாலக்கோடு , நரிப்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், பேகாரஅள்ளி, வெங்கட்டம்பட்டி ஆகிய 7 அணிகள் கலந்து கொண்டன.

வெற்றி பெற்ற அணிகள் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு  சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் போட்டியின் நடுவர்களாக ஹாக்கி யூனிட் செயலாளர்  குமார், பொருளாளர் முனியப்பன், இணை செயலாளர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் வெங்கடோன், ரவி, ரமேஷ், இளவரசன், பச்சியப்பன்,  உடற்கல்வி இயக்குளர் மதேஷ, அறிவழகன், செந்தில், இளையராஜா உடற்கல்வி இயக்குநர் மாதேஷ், இளையராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் அறிவழகன், குமார், குமரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.