பாலக்கோடு

Aug 06, 2025, viewer - 3308, வேலு   நிருபர் (தருமபுரி).

பாலக்கோடு அரசு கலை கல்லூரியில் கலிலியோ ஆப்ஃஷோர் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள 
டாக்டர். எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  வேதியியல் துறை மாணவர்களுக்கு கலிலியோ ஆப்ஃஷோர் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று  நடந்தது.

இந்த நிறுவனமானது அரசு கல்லூரிகளில் பயிலும்  மாணவர்களின்  வளர்ச்சிக்காக பல சலுகைகளை வழங்கி வருகிறது, அதனடிப்படையில் இக்
ல்லூரியில் பயிலும் வேதியல் துறை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக புரிந்துனர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம், துறைத்தலைவர்,  அன்பரசன் மற்றும் துறை ஆசிரியர்கள் கதிர்வேல் வெற்றிஅரசு மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.