பாலக்கோடு

Aug 06, 2025, viewer - 3511, வேலு   நிருபர் (தருமபுரி).

பாலக்கோடு புதிய மோட்டார் வாகன ஆய்வாளராக ராஜேஸ்கண்ணா பொறுப்பு ஏற்பு


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக ராஜேஸ்கண்ணா  பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இதற்கு முன்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் மோட்டார் ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில் தமிழகஅரசு அவருக்கு பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளராக பணிமாறுதல் செய்து உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து நேற்று பாலக்கோடு  மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் 11 வது மோட்டார் ஆய்வாளராக பொறுப்பேற்று கொண்டவர்,
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றும், வாகனங்கள் முறையாக தணிக்கை செய்யப்பட்டு மோட்டார் வாகன  விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை கண்காணித்து உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.
புதிய மோட்டார் வாகன ஆய்வாளருக்கு அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஏற்கனவே மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய பாலசுப்ரமணியம் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவகத்திற்கு பணி மாறுதல் பெற்றார்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.