ஏரியூர் தமிழ்ச்சங்கம் சார்பில் 7 ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வீடுதோறும் நூலகம் வீதிதோறும் வாசிப்பு என்ற பொருண்மையில் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நெருப்பூரில் நடைபெற்றது.நிகழ்விற்கு ஏரியூர் தமிழ்ச்சங்கம் செயலாளர் ம.அருள்குமார் வரவேற்று பேசினார்.சமூக ஆர்வலர் தே.கமலேசன் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
ஊர் முக்கிய பிரமுகர்கள் மு.மல்லமுத்து , ஆ.செல்வராஜ் , பெ.பெரியசாமி , பெ.சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
ஏரியூர் தமிழ்ச்சங்கம் நிறுவுநர் மற்றும் தலைவர் நா.நாகராஜ் நோக்கவுரை வழங்கினார். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.பழனி பங்கேற்று வாசிப்பின் அவசியத்தையும் தருமபுரி புத்தகத் திருவிழாவின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.அவர் பேசுகையில்
குடும்பங்களிலிருந்து முதலில் வாசிப்பு பழக்கம் தொடங்க வேண்டும் கைப்பேசியில் அதீத நேரம் செலவிடாமல் புத்தகத்தில் செலவிட வேண்டும்.
கிராமங்களில் வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார் .
தருமபுரி புத்தகத் திருவிழாவிற்கு அனைவரும் வருகை தர வேண்டும்.
கிராமப்புற பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரி, ஊர் மக்கள் தருமபுரி புத்தகத் திருவிழாவின் சிறப்புகளை உணர வேண்டும். கிராமங்களில் கடைக்கோடியில் உள்ளவர்கள் புத்தகத்தின் வாசிப்பை நுகர வேண்டும் என்பதற்காக 10 நாட்கள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மனிதனையும் புதுப்பிப்பது புத்தகம் மட்டுமே என்றார்.நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்வில் பொது மக்களுக்கு சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி துரை முத்துக்குமார் சார்பில் மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.சங்கத்தின் பொருளாளர் த.சந்தோஷ் குமார் நன்றி கூறினார். நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.