காரிமங்கலம்

Jun 03, 2025, viewer - 1337, ரமேஷ்   நிருபர் (தருமபுரி).

காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பந்தார அள்ளி ஊராட்சி கள்ளுகடையில் முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது


 காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அடிலம் அன்பழகன் விழாவிற்கு  தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது 
மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம் மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய விவசாய அணி ஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் குமரவேல், அண்ணாமலை, கணேசன், பொதுக்குழு உறுப்பினர் மோகன் ஒன்றிய துணை செயலாளர்கள் சண்முகம் மாதையன் ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிவலிங்கம், குருநாதன், செந்தில்குமார் சின்னராஜ்
மற்றும்  காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்,
சார்பு அணி பொறுப்பாளர்கள்கிளை கழக செயலாளர்கள், வாக்குசாவடி முகவர்கள்,கழக முன்னோடிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.