தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சி.எம்.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திமுக இலக்கிய அணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக இலக்கிய அணி சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், தலைமை ஆசிரியர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 220 மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் அடங்கிய தொகுப்பினை வழங்கி முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் முனுசாமி,துரை,குமார், ரமேஷ்,பழனிசாமி, யசோதா,முத்தன், குண்டன்,கிருஷ்ணன், திருமலைவாசன்,சுரேஷ், ராகுல் ராஜபார்ட், ராஜா, பாபு,கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.