பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உபயோகித்தால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் அதனை எவ்வாறு தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு செய்திட உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் உத்தரவிட்டிருந்தார் இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார் மேற்பார்வையில் பெண்ணாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லோகநாதன் முன்னிலையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் அந்த பொருளின் பெயர் தயாரிப்பு முகவரி தயாரிப்பு காலாவதி தேதி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு விழிப்புணர்வு செய்தார் மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி அருகாமையில் தாங்கள் செல்லும் பகுதியில் ஏதேனும் கடைகளில் விற்பனை செய்வது கண்டால் ஆசிரியர்களிடமோ அல்லது 9444042322 மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் புகையிலை பொருட்களை உபயோகித்தால் வாய்ப்புண் நோய் கேன்சர், கால் விரல் செயலிழந்தல் நினைவு தடுமாற்றம் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழி வகுக்கும் எனவே அதன் பிடியில் சிக்காமல் விழிப்புணர்வுடன் செயல்படவும் தடுத்திடவும் ஒத்துழைப்பு செய்திட வேண்டும் என உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் உதவி ஆசிரியர்கள் சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.