பென்னாகரம், ஜூன் 6- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் உலக சுற்று சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் முதற்கட்டமாக 1300 இடங்களில் 3 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் 180 சிறுபாசன ஏரிகள் தூர்வாரும் தொடக்க விழாவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட கலந்து கொண்டு பல இடங்களில் மரம் நடும் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பென்னாகரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி சாலை பிக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைதுறைஉதவி பொறியாளர் சிங்காரவேலன் மரக்கன்றுகளை நன்று துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து சுமார் 5000 மரக்கன்றுகளை சாலை ஓரம் நட்டு அதற்கு வேலி அமைக்கப்பட்டது இதில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்