பாப்பிரெட்டிப்பட்டி ஜூன்:06
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள
பில்பருத்தி கிராமத்தை ஒட்டி வனப்பகுதி உள்ளது .இந்த வனத்திலிருந்து உணவு தேடி நேற்று ஊருக்குள் வந்த மானை 3 தெருநாய்கள் துரத்தி சென்றதில் மான் மற்றும் 3 நாய்களும் கிணற்றில் விழுந்து உள்ளன. இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.இதன்பேரில்
தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று கிணற்றில், இறங்கி இறந்த நிலையில் கிடந்த மானையும் உயிருடன் இருந்த 3 நாய்களையும் மீட்டனர். மேலும் இறந்த மானை வனத்துறை அலுவலர் ஜெயவேலிடம் ஒப்படைத்தனர்.