கடத்தூர் அருகே உள்ள ஓடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கடத்தூர் போலீஸ் சிறப்பு எஸ்.எஸ். ஐ. சேகர் கலந்து கொண்டு புகையிலை, ஆன்ஸ், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விளக்கி பேசினார்.இந்த நிகழ்ச்சியில் இருபால் மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.