ஊத்தங்கரை

Jun 07, 2025, viewer - 1832, கோவிந்தன்   நிருபர் (கிருஷ்ணகிரி).

ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் விஞ்ஞானி 2025 நிகழ்வு நிறைவு விழா

 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பகுதியில் இயங்கி வரும் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் விஞ்ஞானி2025 கிட்ட நிறைவு விழா நடைபெற்றது இந்த நிகழ்வு கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி 06.06.2025 வரை நடைபெற்றது இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவர்கள் 80பேர் பங்கு பெற்றனர் இந்த நிகழ்வில் சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தியது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவனர் சந்திரசேகரன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் திட்ட அறிக்கை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயற்பியல் துறை தலைவர் அறிவு செல்வி திட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார் கல்லூரி முதல்வர் முனைவர் குணசேகரன் மற்றும் துணை முதல்வர் கவிதா ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள் விழா சிறப்பாளர் ஸ்பா நிறுவனரும் சென்னை சென் பீட்டர் யூனிவர்சிட்டியின் புல முதன்மையா் பேராசிரியர் குணசேகரன் சிறப்புரை ஆற்றிய நிகழ்வில் ஒன்பதாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வேதியியல் இயற்பியல் உயிரியல் சுற்றுச்சூழலியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் பொன் போன்ற பாடங்களில் ஆராய்ச்சிகளில் ஆர்வம் ஏற்படுத்த 15 நாட்கள் தங்கி உணவு மற்றும் உறைவிடம் வழங்கி சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது இந்த முகாமில் கல்பாக்கம்IGCAR சார்ந்த முனைவர் சுந்தர்ராஜன் தேசிகன் குமரேசன் தயானந்தன் அறிவு செல்வியை உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.