தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அருகே உள்ள கதிரிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு வளர்த்து வருகிறார். இவரது விவசாய கிணற்றின் அருகே மாட்டை மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார். அப்போது அந்த மாடு கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இறங்கி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.