தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி அக்ரஹாரம் கால்நடை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த கால்நடைகளை தட்டிக் கொடுத்து நோய் சிகிச்சை பற்றியும் சரியான நேரத்தில் தினமும் டாக்டர் வருகிறார்களா என கேட்டறிந்தார் அப்போது ஆட்டுக்குட்டி சிகிச்சைக்காக வந்திருந்த விவசாயிடம் எத்தனை ஆடுகள் உள்ளன ஆட்டுக்குட்டி ஏன் தலை தொங்கி நிலையில் உள்ளது என நோய் குறித்து கேட்டறிந்தார்.
மாவட்ட ஆட்சியர் டாக்டரிடம் வந்தவுடன் "பயமுறுத்தாதே" அதற்குண்டான சிகிச்சையை அளிக்க வேண்டும் என டாக்டரிடம் அறிவுரை வழங்கி பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த மருந்துகளை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.