தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி காந்தி நகரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பேருராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.மாரண்டஅள்ளி காவல் நிலையம் எதிரில் உள்ள காந்தி நகரில் பேரூராட்சி சார்பில் புதியதாக காந்தி சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது, சிலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் பேரூராட்சி சார்பில்
பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனை தெடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.