காரிமங்கலம்

Jun 14, 2025, viewer - 2097, ரமேஷ்   நிருபர் (தருமபுரி).

கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் சொகுசு காரில் கடத்தி வந்த 300 கிலோ குட்கா பறிமுதல்- டி.எஸ்.பி மனோகரன் அதிரடி.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக  தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை  கடத்துவதாக டி.எஸ்.பி.மனோகரன் அவர்களுக்கு   கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விடியற்காலை  காரிமங்கலம் அடுத்துள்ள கும்பாரஅள்ளி சோதனை சாவடியில்  இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் எஸ்.ஐ-கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக  வேகமாக வந்த சொகுசு காரை சந்தேகமடைந்த போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் 2 இலட்சம்  மதிப்பிலான 306 கிலோ அளவிலான குட்கா மூட்டை மூட்டையாக கடத்தி வந்தது தெரிய வந்தது.

டிரைவரை கைது செய்து விசாரித்ததில் குஜராத் மாநிலம், பனாஸ்கந்தா ஜடியா மாவட்டத்தை சேர்ந்த கணேசபாய் ரப்பாரி (25) என்பதும் கர்நாடகா மாநிலம் பெங்களுரில் இருந்து சேலத்திற்க்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து சொகுசு காருடன், குட்காவை பறிமுதல் செய்த போலீசார்,  வழக்கு பதிவு செய்து டிரைவரை சிறையில் அடைத்தனர்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.