.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் மத்திய மாநில அரசு சார்பில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நடந்து வரும் திட்ட பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்வோத்தமன், தனலட்சுமி ஆகியோர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பணிகள் தன்மை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலம் குறித்தும் நிலுவையில் உள்ள பணிகள் எண்ணிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கேட்டுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் உதவி பொறியாளர் சரத் குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, சரளா, வீரபத்திரன், குமார் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.