தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் ராஜ்யசபா எம்பி நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் எம் எல் ஏ தலைமை வகித்தார். சம்பத்குமார் எம்எல்ஏ மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வெற்றிவேல் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார் செல்வராஜ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு முன்னாள் தலைவர் பொன்னுவேல் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர் டாக்டர் சந்திரமோகன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் காந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் எம்பி நூலகத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் அணி டாக்டர் அசோகன் அவை தலைவர்கள் உதயசங்கர், மகாலிங்கம் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சிவம், வழக்கறிஞர் பிரிவு வக்கீல் பாரதி கவுன்சிலர்கள் நாகம்மாள் இந்திராணி ராமச்சந்திரன் கீதாமுத்து செல்வம் செவத்தாள் நிர்வாகிகள் கணபதி, சந்திரன், பெரியசாமி தனபால் ஐடி விங் கோவிந்தசாமி கௌதம் சாந்தகுமார் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.